Board of Trustees
ஒட்டங்கேணி என்பது ஒரு காரணப்பெயர் 17ஆம் நூற்றாண்டில் கச்சாய் ஊரில் வாழ்ந்த ஒட்டர் குல வம்சத்தைச் சேர்ந்த ஓட்டர்கள் ஒருநாள் கேணி ஒன்றை வெட்டிக் கொண்டு இருக்கையில் ஓட்டன் ஒருவனின் மண்வெட்டி ஒரு கல்லில் வெட்டுப்பட்டு அதில் இருந்து இரத்தம் இடைவிடாது வந்து கொண்டிருந்தது, இதை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அந்தப் பிள்ளையார் வடிவிலான கல்லை விழுதுகள் தாங்கிய பெரும் ஆலமர விருட்ச்சத்தின் கீழ் வைத்து நீர் தெளித்து பிள்ளையாரை நினைத்து வணங்கியபோது அக் கல்லில் இருந்து வழிந்த இரத்தம் உறைந்து மறைந்தது.
அன்று தொட்டு அந்த இடம் பிள்ளையார் கோயிலாக மாறியது. இதனை தொடர்ந்து ஒட்டன் வெட்டிய கேணியை ஊர்மக்கள் குளமாகப் பெரிப்பித்தனர்.
ஒட்டன் கேணியை வெட்டியபோது வெளிப்பட்ட கல்லு பிள்ளையாராக பிரதிபலித்தமையால் மக்கள் விருட்ச்சத்தின் கீழ் அந்த கல்லை வைத்து ஒட்டன் கேணி பிள்ளையார் என்று வழிபட்டு வந்தார்கள். இன்றும் அந்த கல் கோவிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டு, தான்தோன்றீஸ்வரர் ஆன அந்த விநாயகப் பெருமானுக்கே முதற்ப் பூசை செய்யப்படு வருகிறது.
காலப்போக்கில் ஓட்டன்-கேணி மருவி ஒட்டங்கேணி ஆகத் திரிவுபட்டது. "ஒட்டங்கேணி" என்ற காரணப்பெயர் தொடர்ந்து மரபுப்பெயராக பல நூற்றாண்டு காலம் இருந்து வருகிறது. ஒட்டங்கேணி என்ற தனிச்ச்சொல் இலங்கையிலே கச்சாய் வடக்கு கொடிகமத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஒட்டங்கேணி பிள்ளையார் கோயிலையே குறிக்கும்.
ஓட்டங்கேணி ஆலயத்தை அண்மித்த காணிகளின் உறுதிகளில் எல்லை காப்பக ஓட்டங்கேணி என்ற பெயரே இன்றும் காணப்படுகிறது.
ஒட்டங்கேணி என்ற சொல் "ஒஇ அஇ எஇ" என்ற நான்கு தமிழ் உயிர் எழுத்துக்களை பிரதிபலிக்கிறது ஒட்டங்கேணி என்ற சொல்லில் ஓங்கார அகரத்துடன் மூன்று இடத்தில் "இ" இணைந்து பதினெட்டு மெய் எழுத்துக்களையும் பிரதிநிதிப்படுத்தும் முதன்மை ஒலியாக ஒட்டங்கேணி ஒலிக்கிறது. இதுவே ஓங்கார நாதத்தின் ஒலிப்படலமாகும்.
ஒட்டங்கேணி என்ற மரபுச்சொல் ஒட்டங்கேணி பிள்ளையாருக்கே உரியது. இப் பெயரை ( "ஒட்டங்கேணி" ) தனியாரோ, பொது அல்லது அரச அமைப்புகளோ பயன்படுத்த முடியாது. (c)
“ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ”
அன்பார்ந்த ஒட்டங்கேணி பிள்ளையார் அடியார்களே !
ஒட்டங்கேணி பிள்ளையார் ஆலயத்தை மேலும் உயர்வடைய செய்ய திருவருள் கூட்டப்பட்டுள்ளது. 50 வருடங்களாக புனருத்தானம் செய்யப்படாத நிலையில் இருந்த இவ்வாலயத்தை 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆலயம் சார்ந்த பெரியோர்கள், அடியார்கள் ஆலோசனைப்படி 2001 புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாவிஷேகம் சிறப்பாக நடாத்தப்பட்டது.
2010 ஆண்டு ஆலய உபய அடியார்கள் முன்வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்துக்கு மகோற்சவம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டு ஆடி அம்மாவாசை நாளன்று தீர்த்தோற்சவ நாளாக கணித்து 10 நாள் உற்சவ காலங்களாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 10 வருடங்களாக மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தபோதிலும் தேர், சப்பறம், தீர்த்தக்கேணி என்பன மேம்படுத்தவேண்டிய நிலையிலேயே உள்ளது. கடந்த காலங்களில் சகடைகளிலேயே தேர், சப்பறம் இழுக்கப்பட்டு வந்தது.
விநாயகப் பெருமானுக்கு முழுமையான தேர் ஒன்றையும், அழகான சப்பறம் ஒன்றையும் அமைப்பதற்கு திருவருள் கூடியிருக்கின்ற காரணத்தினால், இவ்வருடம் நடைபெற்ற உற்சவ காலத்தில் ஆலய அதிகாரப்பூர்வமான முகநூல் வழியாக (https://www.facebook.com/oddenkeny.pillayartemple.9) இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் தேர் செய்யும் ஆசாரியர்கள் எம்மை அணுகி இருந்தார்கள். இதற்கு இணங்க நாம் தகுந்த ஆசாரியாரை இனம்கண்டு கடந்த 06/08/2020 இல் ஆலய பரிபாலனசபை தலைவரையும், செயலாளரையும் ஆலயத்தில் தேர் செய்யும் ஆசாரியரை சந்திக்க ஏற்ப்பாடு செய்திருந்தோம்.
இதற்கமைய தலைவரால் நிர்வாகசபை கூட்டம் 08/08/2020 இல் கூட்டப்பட்டது. இதில் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்களையும், ஆலய போஷகர்களையும் அழைத்து தேர், சப்பறம், மற்றும் 2019 யூலை மாதம் ஆரம்பிக்கப்பட ஆலய அறநெறி பள்ளிக்கான கட்டி ட நிலையம் அமைப்பது பற்றியும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிணங்க வரும் ஆவணி மாதம் 6ஆம் நாள் (22/08/20) வளர்பிறை, விநாயகர் சதுர்ஷ்டி தினத்தன்று மதியம் 12:00 மணிக்கு தேர் செய்யும் ஆசாரியார்கள் ஆலய முன்றலில் புதிய தேர் செய்வதற்கன நாள்வேலைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அன்றய தினம் அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வந்து இந் நாளை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சுப்பிரமணியம் கிருஷ்ணதாசன்
தலைமைப் போஷகர்
ஒட்டங்கேணி பிள்ளையார் ஆலயம்.
" மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் "
ஒட்டங்கேணி