Board of Trustees

ஒட்டங்கேணி விநாயகப்பெருமானுக்கான
ரூபா ஒரு கோடி, ஆலய திருப்பணி வேலைத்திட்டங்கள். 

ரூபா 1 கோடி, ஆலய திருப்பணி திட்டங்கள்.
புதிய சித்திரத்தேர்
ரூபா. 37,00,000/-
தேர் ஓடுவதற்கான புதிய வீதிகள் ரூபா. 21,00,000/- 
தேர் ஓடுவதற்கான
புதிய வீதி
புதிய தேர்முட்டி
ரூபா. 25,00,000/- 

சனசமூக நிலையம்
ரூபா. 812,000/- 
புதிய சப்பரம்
ரூபா. 500,000/- 
அர்ச்சகர் / ஆச்சாரிய மண்டபம் ரூபா. 10,00,000/-

ரூபா 1 கோடி, ஆலய திருப்பணி திட்டங்கள்

அன்பார்ந்த விநாயக அடியார்களுக்கு, 

ஒட்டங்கேணி விநாயகப்பெருமானுக்கான ரூபா ஒரு கோடி, ஆலய திருப்பணி வேலைத்திட்டங்கள்.

1. புதிய சித்திரத்தேர் : ரூபா. 37,00,000/-
புதிய சித்திரத்தேர் வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. ஆலயத்தின் பெயரும், புகழும் மேலோங்கியுள்ளதுடன் கச்சாய் கிராமத்தில் முழுமையான தேர் ஓடும் ஒரே கோயிலாக ஒட்டங்கேணி ஆலயம் சிறப்புப் பெறவுள்ளது. இதற்கான திருப்பணிச் செலவாக ரூபா. 37,00,000/- (முப்பத்தேழு இலட்சம்)

2. தேர் ஓடுவதற்கான புதிய வீதிகள் ரூபா. 21,00,000/-
தேர் ஓடுவதற்கான புதிய வீதி (மேற்கு மற்றும் வடக்கு வீதிகள்) வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆலய சனசமூக நிலைய தலைவர் திரு. காராளபிள்ளை கஜேந்திரன் முகாமைத்துவத்தில் துரிதமாக வீதி வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதன்பால் ஆலயமும் அதன் சூழலும் பாரிய வளர்ச்சி கொண்டுள்ளதுடன் சமூக மேம்பாடுகள், கிராமம் அபிவிருத்தி வளர்ச்சி பெறுகின்றது. புனரமைக்கப்படும் ஆலய கிழக்கு வீதி உட்பட, புதிய இரு வீதிகள் அமைப்பதற்கான செலவாக ரூபா.21,00,000/- (இருபத்தொரு இலட்சம்) முடிகிறது.

3. புதிய தேர்முட்டி : ரூபா.25,00,000/-
வேத-ஆகம விதிப்படி ஆலயத்துக்கான தேர்முட்டி நிலையம் ஆலய வளாகத்துக்கு வெளியில் அமைவதே சிறப்பாக இருந்தாலும், தேவையான காணிநிலம் கிடைக்கப் பெறாமையால் ஆலய வளாகத்துக்குள் தேர்முட்டி அமைக்க ஆலய போசகர்களும் பரிபாலன சபையும் தீர்மானம் எடுத்துள்ளபடியினால், ஆலய வளாக ஈசான மூலையை அண்மித்து உள்ள அரச மரத்தை தவிர்த்து புதிய தேர்முட்டி அமையவுள்ளது. தேர்முட்டியுடன் இணை மண்டபமும் அமையப்பெறுகிறது. சுவாமியை தேரில் ஏற்றி இறக்கவும், பக்தர்கள் தங்கள் தேர் அர்ச்சனைகளை செய்து விநாயகப்பெருமானின் அருளைப் பெறும் முகமாகவும் தேர்முட்டி மண்டபம் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்முட்டியுடன் இணைமண்டபமும் அமைக்க உத்தேச மதிப்பு ரூபா. 25,00,000/- (இருபத்தைந்து இலட்சங்கள்)

4. ஆலய சனசமூக நிலையம் / அறநெறிப் பள்ளி : ரூபா.812,000/- 

இத்திட்டம் ரூபா. 812,000/- (எட்டு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபா) செலவில் அமைக்கப்பட்டு தற்போது செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆலய சனசமூக நிலையம் இதுவரைக்கும் மக்கள் சேவைக்காக ரூபா. 464,947/- மேலதிகமாக செலவளித்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். / ரூபா. 12,76,934/-

5. புதிய சப்பரம்: ரூபா. 500,000/-
ஆலய புதிய சப்பரம் இவ்வருடம் 06/08/2021 இல் வெள்ளோட்டம் நிகழவுள்ளது இதற்கான உத்தேச செலவு ரூபா. 500,000/-

6. அர்ச்சகர் / ஆச்சாரிய மண்டபம் ரூபா 10,00,000/-
ஆலய மகோற்சவ காலங்களில் ஆச்சாரியர்கள் தங்குவதற்கு தற்போது உள்ள சனசமூகநிலைய மையத்தை தற்காலிகமாக 10 நாள் திருவிழாக்காலங்களில் பாவிக்க இருப்பதாலும். வரும் வருடங்களில் ஆலய, மற்றும் மகோற்சவ காலங்களில் வரும் ஆச்சாரியர்களுக்கான புதிய இருப்பிடம் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவாக சுமார் ரூபா 10,00,000/- (பத்து இலட்சம் ரூபாக்கள் ) தேவைப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2021/2022 ஆண்டுக்கான ஆலய திருப்பணித்திட்டங்களாக
புதிய சித்திரத்தேர் : ரூபா. 37,00,000/-
தேர் ஓடுவதற்கான புதிய வீதிகள் ரூபா. 21,00,000/-
புதிய தேர்முட்டி : ரூபா. 25,00,000/-
ஆலய சனசமூக நிலையம் / அறநெறி பள்ளி: ரூபா.812,000/-
புதிய சப்பரம்: ரூபா £500,000/-
அர்ச்சகர் / ஆச்சாரிய மண்டபம் : ரூபா 10,00,000/-
மொத்தத் திருப்பணி செலவுகள்: ரூபா 1,06,12,000/-

எதிர்பார்க்கப்படும் மொத்த திருப்பணி செலவுகள்: ரூபா 1,06,12,000/- (ஒருகோடி ஆறு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாக்கள்).

மேற்குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்ற ஆலய அன்பர்கள் முன்வந்து உங்கள் திருப்பணி நிதிகளை விநாயகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தி ஒட்டங்கேணியானின் கருணையையும், அருளையும் பெறுவீர்களாக !!!

இத்துடன் திருப்பணி நிதிக்கான மாதிரி பற்றுச்சீட்டு இணைக்கப்பட்டுள்ளது.

சு. கிருஷ்ணதாசன்
தலமைப் போஷகர்
ஆலய பரிபாலன சபை சார்பாக.

திருப்பணிக்குழு

அருள்மிகு ஒட்டங்கேணிப் பிள்ளையார் ஆலயத்தின் பங்குனி மாதம் (11/04/2021) இல் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில், திருப்பணி நிதி திரட்டுவதற்காக புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. ஆலய திருப்பணிக்குழு அங்கத்தவர்களாக :- தலைவர்: திரு. இ. ஹர்ஷன், செயலாளர்: திரு. தே. துசியந்தன், பொருளாளர்: திரு. ச. வேணுகானன். செயற்குழு உறுப்பினர்கள்:- திரு. பொ. கேதீஸ்வரன், திரு. வே. சடாச்சரமூர்த்தி, திரு. உ. மகிந்தன், திரு. ச. குகதாசன், திரு. கே. கஜன், திரு. கே.கஜாலன், திரு. கா. கஜேந்திரன். - ஆலய பரிபாலனசபை.

Board of Trustees