Board of Trustees POOJA LIST

POOJA LIST 2024

வருடாந்த நித்திய பூசை, விசேஷ தினங்களுக்கான தகவல்கள் - 2024/25 

நித்திய பூசை தகவல்கள் 2024

யாழ் / கச்சாய் வடக்கு, கொடிகாமம்
ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய

வருடாந்த
நித்திய பூசை, விசேஷ தினங்களுக்கான தகவல்கள் - 2022  

 

 சிவமயம் 

1.   60 வருட சுழற்சியைக் கொண்ட வருடங்களின் பெயரில் 12 தமிழ் மாதங்களில்; 60 பூசை உபயகாரர்கள் நித்திய பூசைக்கு உபயம் அளிக்கிறார்கள்.

2.   தமிழ் மாதம் பிலவ வருஷம் (கீழறை வருடம்) கலியுகம் 5122 தை முதலாம் நாளிலிருந்து சுபகிருது (நற்செய்கை) வருஷம் கலியுகம் 5123 மார்கழி 30 ம் நாள்வரை (14/01/2022 – 14/01/2023) இப்பூசைப்பட்டியல் உள்ளது.
    

3.   வருடத்தில் 300 நாட்கள், 60 அடியார்களுக்கு தலா 5 நாள் பூசை வழங்கப்பட்டுள்ளது. 

 4.   நித்திய பூசைகளாக நாள்தோறும் இரண்டு பூசைகள் (உச்சிகால பூசை, சாயரட்சை பூசை) நடைபெறும்.

 5.   மதியம் 12:00 மணிக்கு உச்சிகாலப் பூசையும், பி.ப 6.00 மணிக்கு சாயரட்சை பூசையும் நடைபெறும்.   
6.   சதுர்த்தி விரத நாள் பூசை; அந்த மாத உபயகாரர்களுக்கு (4 / 5) வழங்கப்படுகிறது.    

 7.   இவ்வருடத்துக்கான வருடாந்த பூசை உபயமாக ரூபா.12,000/- (பன்னிரெண்டாயிரம் ரூபா) கணிக்கப்பட்டுள்ளது.   
 8.   ஆலய பரிபாலன சபை; அபிஷேக, அலங்கார, அர்ச்சனை, நைவேத்திய, ஆராதனை, உற்சவ பொருட்களுக்கு பொறுப்பாக இருப்பார்கள்.   
 9.   நித்தியபூசை நாட்களில்; அந்த மாத உபயகாரர்கள் மேலதிகமாக விசேட அலங்கார, அபிஷேக, நெய்வேத்திய, பூசைகளை மேலும் சிறப்பாகச் செய்யலாம்.   
10.  அர்ச்சகருக்கான மாத ஊதியத்தை ஆலய பரிபாலனசபை வழங்கும், உபயகாரர் விரும்பினால் தட்சணை அர்ச்சகருக்கு வழங்கலாம்.   
 11.  உபயகாரர் அர்ச்சனை:- உபயகாரர்கள் தங்கள் குடும்பப் பெயர், நட்சத்திரங்களை நித்திய பூசைக்குமுன் அச்சகரிடம் வழங்கவேண்டும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஆலய பரிபாலன சபையிடம் ஆலய மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம். (Email: admin@oddenkerny.com அல்லது oddenkerny@gmail.com).  
12.  குறிப்பிட்ட நாள் உபயகாரர் தவிர்ந்த அடியார்கள் ஆலய பற்றுசீட்டுகளை பெற்று தங்கள் அர்ச்சனைகளை செய்யலாம்.  
13.  ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி விரத நாளன்று விசேட பூசைகளை பக்தர்கள் ஆலய பரிபாலன சபை ஊடாக பதிந்து செய்யலாம்.  
14.  விசேஷ தினங்களில் நித்திய பூசைகள் பொது உபயமாக இருக்கும். அந்நாட்களில் அடியார்கள் தங்கள் நேர்த்திப் பூசைகளை; காணிக்கைகளை செலுத்தி பரிபாலனசபையூடாக செய்யலாம்.  
15.  திருவிழாக் காலங்களிலும், பிள்ளையார் கதை 21 நாட்களிலும் உபய அடியார்கள் உபயமளிப்பார்கள்.  
16.  ஏனைய விசேஷ தினங்களுக்கான பூசைகளை செய்யவிரும்புவோர் மேலதிக கட்டணத்தை வழங்கி, நித்திய பூசை உபயகாரருடன் இணைந்தே செய்தல்வேண்டும்.  
17.  ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய நித்திய பூசை விபரங்களை பின்வரும் ஆலய இணையத்தளத்தில் (www.oddenkerny.com/poojalist) அல்லது முகநூலில் (facebook.com/oddenkeny.pillayartemple.9) பார்க்கலாம்.   
 குறிப்பு:- யாழ் / கச்சாய் வடக்கு, கொடிகாமம் ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய ஆலய யாப்பு (14/01/2021); யாப்பின் பிரிவு 34 இன் பிரகாரம் இப் பூசைப் பட்டியல் அமைகிறது.  

- ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய பரிபாலன சபை.

ஒட்டங்கேணி

ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய நித்திய பூசை உபய அன்பர்கள் பட்டியல்
ODDENKERNY SRI MAHA GANAPATHY TEMPLE
DAILY POOJA LIST   (14/01/2022 – 14/01/2023)




ஒட்டங்கேணி
ஸ்ரீ 
மஹா கணபதி ஆலயம்

ODDENKERNY
SRI MAHA GANAPATHY TEMPLE

OK Street, Kachchai North, Kodikamam, Sri Lanka

Board of Trustees Pooka List