Board of Trustees

OCC

Our mission is social development  
      எங்கள் பணி சமூக மேம்பாடு



ட்டங்கேணி சனசமூக நிலையம் (ஒ.ச.நி) 
Oddenkerny Community Centre (OCC)

ஒட்டங்கேணி சனசமூக நிலைய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சித்திரம் தீட்டும் போட்டிகள் ஆலய மண்டபத்தில் 11/08/2023 இல் நடைபெற்றது. 
2019இல் இருந்து 5ஆவது வருடமாக இந்நிகழ்வுகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சிக்குரியதே.  

ஒட்டங்கேணி சனசமூக நிலைய அறநெறிப் பாடசாலை 

இன்று, மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவரான திருமதி ற. சுபானி அவர்களால் ஆங்கில சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டது, மேலும் குழந்தைகள் தங்கள் உலக மொழியை வளர்ப்பதற்கான சக்கரத்தை எவ்வாறு திருப்புவது என்பதைக் கற்றுக்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் எங்களின் சிறந்த ஆசிரியைகளான திருமதி வே.செல்வராணி மற்றும் திருமதி இ. சிவயோகம் ஆகியோர் தூய தமிழ் வகுப்புகளுடன் பண் இசை மற்றும் சைவத்தமிழ் பாடங்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றனர்.

ஒட்டங்கேணி சனசமூக நிலைய அறநெறிப் பாடசாலையானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. கோவில் வளாகத்தில் உள்ள O.C.C மண்டபத்தில் வகுப்புகள் நடக்கிறது. / 03 JUNE 2022
OCC 

Oddenkerny Community Centre 

Oddenkerny Community Centre Moral School is being held continuously from 4:00 pm to 6:00 pm every Friday. Classes are held in the OCC Hall on the temple premises.

Today, a special English class was begun by one of the most famous teachers, Mrs R. Subani, and the children are very happy to learn how to turn the steering wheel in order to develop their World language.

Also, our great teachers Mrs V. Selvarani and Mrs R. Sivayogam are continuing to take Music and Shaivam with pure Tamil classes.

பாலாவித்தாள் மயான வீதி சீர்திருத்தம்

கச்சாய் வடக்கு, கொடிகாமம், "பாலாவித்தாள் மயானம்" மற்றும் அதற்கு செல்லும் வீதி பல முள்ச் செடிகள் நிறைந்த பற்தைக் காடுகள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்தது. இதை ஊர்மக்கள் பலதடவை அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் முறையிட்டபொழுதும் முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் இன்று 17/04/2021 இல் ஒட்டங்கேணி ஆலய சனசமூக நிலைய (OCC) உறுப்பினர்கள் முன்வந்து ஊர்மக்களின் உதவியுடன் இவ் வீதி ஓரங்களில் இருந்த பற்றை காடுகளை பெக்கோ இயந்திரம் மூலம் அகற்றி வீதியை சுத்தம்செய்து அகலப்படுத்தியுள்ளார்கள்.

"Our mission is social development / எங்கள் பணி சமூக மேம்பாடு"

ஒட்டங்கேணி சனசமூக நிலையம் (ஒசநி) / ODDENKERNY COMMUNITY CENTRE (OCC)

அறநெறி வகுப்புகள்

வணக்கம்! எமது சனசமூக நிலையத்தின் பாலர், மற்றும் சிறார்களுக்கான அறநெறி வகுப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 18/04/2021 இல் பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

அனைத்து மாணவர்களையும் இதில் கலந்து கொள்வதோடு விண்ணப்பங்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், அத்துடன் சேவை செய்யவிரும்பும் சகலதுறை ஆசிரியர்களையும், அன்புடன் அழைக்கின்றோம்.

ஆசிரியர்கள்:
செல்வி. பரநிருபசிங்கம் யோகாம்பிகை - தமிழ், சைவசமயம்.
செல்வி. பரமநாதன் கார்த்திகா: பண்ணிசை, பூ மாலை கட்டல்
செல்வி. விநாசித்தம்பி கமலேஸ்வரி : கணிதம், விஞ்ஞானம்
திருமதி. ரமேஷ் சுபாஷினி : ஆங்கிலம்

விண்ணப்ப படிவம் பெற: https://files.websitebuilder.prositehosting.co.uk/f3/4f/f34f6ac2-2bb1-412e-acd4-a77288fa54bf.pdf

ஒட்டங்கேணி ஆலய சனசமூக நிலையம் - Oddenkerny Community Centre (OCC)
"Our mission is social development / எங்கள் பணி சமூக மேம்பாடு"

மேலதிக தொடர்புகளுக்கு: தலைவர், கஜேந்திரன்: 0777555504 / செயலாளர், வேணுகாணன்: 0766409725

OCC MEMBERSHIP APPLICATION FORM.pdf

“உழவர் திருநாள் அன்பளிப்பு 2021” 

150 குடும்பங்களுக்கு தலா ரூபா.1600/- படி மொத்தம் ரூபா.240,000/- பெறுமதியான பொங்கல் பொதிகள் புதிய வெண்கல பானையுடன் அன்பளிப்பு - அனுசரணை ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய பிரித்தானிய கிளை ஒருங்கிணைப்பாளர் திரு சுப்ரமணியம் மோகனதாசன்.

வாழ்த்துச் செய்தி

யாழ்/பல்கலைக்கழக சமூகவியற்துறை பேராசிரியரும், முன்னை நாள் துணை வேந்தருமான பேராசிரியர் திரு. N. சண்முகலிங்கன் அவர்கள் ஒட்டங்கேணி சனசமூக நிலைய “உழவர் திருநாள் அன்பளிப்பு 2021” பற்றிய வாழ்த்து செய்தி

Rs.240,000.00/-

“உழவர் திருநாள் அன்பளிப்பு 2021”

OCC தனது சமூக சேவைகளை 18 மாத காலமாக ஊர் மக்களுக்கு செய்து வரும் வேளையில் “தைத்திருநாள் பொங்கலை” சிறப்பிக்கும் முகமாக 150 குடும்பங்களுக்கு தலா ரூபா.1600.00/- (Total Rs.240,000.00) பெறுமதியான பொங்கல் பொதிகளுடன் புதிய வெண்கல பானையினை அன்பளிப்பு செய்து எமது பாரம்பரிய பொங்கல் விழாவை மேலும் சிறப்பிக்க செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

“உழவர் திருநாள் அன்பளிப்பு 2021”
ரூபா.240,000.00/-

ஒட்டங்கேணி சனசமூக நிலையம் ODDENKERNY COMMUNITY CENTRE (OCC)
அன்பார்ந்த ஒட்டங்கேணி சனசமூக நிலைய உறுப்பினர்களுக்கு எமது தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!
OCC தனது சமூக சேவைகளை 18 மாத காலமாக ஊர் மக்களுக்கு செய்து வரும் வேளையில் “தைத்திருநாள் பொங்கலை” சிறப்பிக்கும் முகமாக இன்று 150 குடும்பங்களுக்கு தலா ரூபா.1600.00/- (Total Rs.240,000.00) பெறுமதியான பொங்கல் பொதிகளுடன் புதிய வெண்கல பானையினை அன்பளிப்பு செய்து எமது பாரம்பரிய பொங்கல் விழாவை மேலும் சிறப்பிக்க செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

தற்போதைய கொரோண-19 வைரஸ் தாக்கத்தின் முடக்கத்துடன், இன்றய பெருமழை காரணமாக ஏற்றப்பட வெள்ளம் வீட்டு முற்றங்களை மேவி நிலை கொண்டு இருப்பதால், சூரிய பொங்கலை பானை வைத்து பொங்க முடியாதநிலையில் எமது கிராமம் உள்ளது. OCC வெண்கல பானைகளை வழங்கி, மக்கள் வீட்டின் சமயலறையில் பொங்கி மகிழ்ச்சியான இந்நாளை மகிழ்வோடு கொண்டாட வழிசெய்துள்ளது.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கேற்ப எமது மக்களை வாழ்த்தி எல்லாம் வல்ல ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆசீர்வாதத்துடன் விநாயகரின் புகழையும், ஒட்டங்கேணியின் தனிப் பெருமையையும் பேணிப்பாதுகாக்க உங்கள் அனைவரின் நல்லாசியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

“உழவர் திருநாள் அன்பளிப்பு 2021” க்கான அனுசரணையை வழங்கியவர் ஒட்டங்கேணி ஸ்ரீ மஹா கணபதி ஆலய பிரித்தானிய கிளை ஒருங்கிணைப்பாளர் திரு சுப்ரமணியம் மோகனதாசன், அவருக்கு எமது பாராட்டுகளயும், நன்றியையும் தெரிவிப்பதோடு; விநாயகப்பெருமானின் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுகிறோம்.

இந்நிகழ்வுகளை இனிதே நிறைவேற்ற எம்முடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட நிர்வாகக்கு உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 
நன்றி வணக்கம்
காராளபிள்ளை கஜேந்திரன் - தலைவர்.
சபாநாயகம் வேணுகானன் - செயலாளர்.

(ஒட்டங்கேணி சனசமூக நிலைய நிர்வாகக் குழு சார்பாக)
ஒட்டங்கேணி சனசமுக நிலையம், ஒட்டங்கேணி வீதி, கச்சாய் வடக்கு, கொடிகாமம், இலங்கை.

“உழவர் திருநாள் அன்பளிப்பு 2021” 

OCC

ODDENKERNY  COMMUNITY CENTRE (OCC)   Traditionally opened

Oddenkerny Community Centre (OCC) was established on 26th July 2019. We are happy to inform that OCC’s new building was traditionally opened on the 30th of November 2020. It is located at Oddenkerny Pillayar Temple, OK Street, Kachchai North, Kodikamam, Sri Lanka.

The Oddenkerny temple patron Mr Veluppillai Sadachcharamoorthi, J/ Kachchai Maha Vidyalaya principal and the OCC vice patron Mr Kasinathar Kulasingam did the lighting of the traditional oil lamp and opened the new building. The temple patron and the former treasurer of Oddenkerny temple trustee Mr Kathirgamar Rasiah opened the OCC sign board.

The Oddenkerny temple president Mr Ramaligam Harshan, OCC president Mr Karalapillai Kajenthiran and the OCC secretary Mr Sabagnayagam Venuganan and OCC members and temple devotees did the lighting of the traditional oil lamp. Furthermore, the temple president, the OCC president and the secretary gave a speech. Following that Rs.75,000/- bank deposited slips was given as a gift for 3 students who passed the year 5 scholarship exam. This fund has been donated by Mr Subramaniam Mohanathaasan UK (temple devotee). With the current uncertain situation (Covid-19), the OCC new building was traditionally opened with limited people. However, OCC grand opening will be held in early 2021.


ஒட்டங்கேணி சனசமூக நிலைய திறப்பு விழா
Oddenkerny Community Centre opening ceremony


ஒட்டங்கேணி வீதி, கச்சாய் வடக்கு, கொடிகாமத்தில் அமைந்துள்ள ஒட்டங்கேணி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அதன் அதிகார பூர்வமான "ஒட்டங்கேணி சனசமூக நிலையம்" (ஒ.ச.நி) 26/07/2019 இல் ஒட்டங்கேணி பிள்ளையார் பரிபாலன சபையினால் உருவாக்கப்பட்டது. அதன் புதிய கட்டடத்தை 30/11/2020 மதியம் 12.00 மணிக்கு பாரம்பரிய முறைப்படி திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

ஒட்டங்கேணி பிள்ளையார் ஆலய பரிபாலனசபையின் போசகரில் ஒருவரான திரு. வேலுப்பிள்ளை சடாச்சரமூர்த்தி அவர்களும், யாழ்/கச்சாய் மகா வித்தியாலய அதிபரும், ஒட்டங்கேணி சனசமூக நிலைய துணைப் போசகருமான திரு. காசிநாதர் குணசிங்கம் அவர்களும் மங்கள விளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.

முன்னைய ஆலய பரிபாலன சபையின் பொருளாளரும், தற்போதைய போசகருமான திரு. கதிர்காமர் இராசையா அவர்கள் “அடையாள பலகையை” திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒட்டங்கேணி பிள்ளையார் ஆலய பரிபாலனச தலைவர் திரு. இராமலிங்கம் ஹர்சன், ஒட்டங்கேணி சனசமூக நிலைய தலைவர் திரு. காராளபிள்ளை கஜேந்திரன், செயலாளர் திரு. சபாநாயகம் வேணுகாணன் மற்றும் ஒட்டங்கேணி ஆலய, சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும் மங்கலவிளக்கேற்றினார்கள். ஆலய அடியார்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் இந்நிகழ்வானது ஆலய பரிபாலனசபை தலைவர், மற்றும் சனசமூகநிலைய செயலாளர் உரையுடன் இன்றய நிகழ்வில் 2020ஆம் ஆண்டுக்கான 5ம் வகுப்பு புலமை பரீட்சையில் சித்திபெற்ற ஒட்டங்கேணி ஆலயத்துக்கு அண்மித்த 3 மாணவ செல்வங்களுக்கு தலா ரூபா £25,000/- படி மொத்தம் ரூபா.75,000/- (எழுபத்தையாயிரம் ரூபா) வங்கி வைப்பு கணக்கில் இட்டு பற்று சீட்டுகளும் வழங்கப்பட்டது. இதற்கான பங்களிப்பை இலண்டனில் இருந்து ஆலய பக்தர் திரு. சுப்பிரமணியம் மோகனதாசன் அவர்கள் வழங்கினார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை (கொரோண வைரஸ்-19) காரணமாக இன்று மதியம் சுப நேர முகூர்த்தத்தில் சம்பிரதாய முறைப்படி இம்மண்டபத்தை திறந்து வைக்கப்படபோதும், இதன் மாபெரும் திறப்பு விழா 2021ன் முற்பகுதியில் நடத்தப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒட்டங்கேணி சனசமூக நிலையம் 
Oddenkerny Community Centre (OCC)

ஒட்டங்கேணி சனசமூக நிலையம் (ஒ.ச.நி) 26/07/2019 இல் ஒட்டங்கேணி பிள்ளையார் பரிபாலன சபையினால் உருவாக்கப் பட்டது.

இவ் அமைப்பானது சிறார்களுக்கு இலவச அறநெறிக் கல்வி கற்பித்தல், முதியோர் பகுதி நேர ஓய்வு மையம் உருவாக்கல், ஒட்டங்கேணி விளையாட்டு கழக நடவடிக்கைளுக்கு ஊக்கமளித்தல், உள்ளூர் மக்களுக்கான சமூக, வர்த்தக, வாழ்வியல் அறிவுரைகள் வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார நிலைத்திட்டங்கள், மரம் நாட்டுத்திட்டம் போன்ற சமூக நல மேம்பாடை மேலும் வளம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப் பட்டது.

ஒட்டங்கேணி சனசமூக நிலையத்தை வளம்படுத்தும் நோக்குடன் புலம்பெயர் வாழ் ஒட்டங்கேணி ஆலய பக்தர்களின் உதவியுடன் புதிய கட்டிடத்திற்கான நில அடிக்கல் நாட்டு நிகழ்வு 24/08/2020  இல் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 1998 இல் உருவாக்கப்பட ஆலய பரிபாலன சபையின் பொருளாளரும், தற்போதைய போசகர்களில் ஒருவருமான திரு. கதிர்காமர் இராசையா அவர்கள் அடிக்கல் இட்டு ஆரம்பித்துவைத்தார். மற்றும் ஆலய பரிபாலன சபை, ஆலய தெண்டரணி அங்கத்தவர்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள். மேலும் இக் கட்டிட வேலைகள் ஆலய பரிபாலன சபை மற்றும் ஆலய தொண்டரணி அங்கத்தவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும்.

ஒட்டங்கேணி சனசமூக நிலையம் /  Oddenkerny Community Centre

Oddenkerny Community Centre (OCC) was initially formed on the 26th of July 2019 at the Oddenkerny Pillayar temple committee. The aim of OCC is to run a free children school, elderly gathering, sport activities, local community advice, the environmental safety and Health action plan and new tree plantation program etc. 

We are happy to inform you that Odden Kerny Pillayar Temple has put a foundation for the temple’s own community centre in the same land as the temple located at Oddenkerny Lane, Kachchai North Kodikamam. This project under the O.K temple committee as well as devotes and donner will be contributed. 

On 24/08/2020 at 6.45 am the temple’s one of the Patron Mr Kathirkamar Rasaiya and Committee’ president Mr Sivaramalingam Harshan, assistant secretary Mr Thambiraja Supakaran, committee members, Mr Ponrasa Thirukethiswaran, Mr Venugaanan Sabanayagam, Mr Tharmalingam Raviinthiran, Mrs Pramanathan Nakulampikai, voluntary group leader Mr Thevarasa Thusianthan, voluntary members Mr Uruthiramoorthi Mahinthan, Mr Thevarasa Nakuleswaran, Mr Thirukethiswaran Kajalan and Builder Mr S Navaratnam committed the new building foundation.

Oddenkerny Temple committee and the devotees have formed the Hindu religious School for children and Sport Organisation via Temple Community Centre on July 2019.

Hence this community centre will run the following activities and the facilities for the local community:- Children School, Sport centre office, Elderly gathering point, community advice centre, Temple committee meetings, Library, small private meetings etc. for the variable time.

This centre will be run by separate committee however the said “committee” reporting line to “Oddenkerny Pillayar Paripalana Sapai” (Oddenkerny Pillayar Committee).

Thank you for your commitment and support

  • Oddenkerny Pillayar Temple's Management Committee and 
  • ODDENKERNY COMMUNITY CENTRE COMMITTEE

ODDENKERNY COMMUNITY CENTRE COMMITTEE
ஒட்டங்கேணி சனசமூக நிலைய நிர்வாகசபை

நிர்வாகக்குழு

ஆலய பரிபாலனசபையினால் நடத்தப்பட்டு வந்த ஒட்டங்கேணி சனசமூக நிலையம், பரிபாலனசபை தலைவர் மற்றும் ஆலய பிரதான போசகர்க ளின் ஆலோசனைப்படி 06/08/2020 இல் ஒட்டங்கேணி சனசமூக நிலை யதுக்கான புதிய நிர்வாகம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒட்டங்கேணி சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களாக.


போஷகர்கள் :  திரு. இராமலிங்கம் ஹர்சன்

          திரு. கதிர்காமர் யோகராஜா  


1.         தலைவர் :-                         திரு காராளபிள்ளை கஜேந்திரன்
2.         செயலாளர்:-                     திரு சபாநாயகம் வேணுகானன்
3.         பெருளாளர்:-                   திரு. வேலுநாயகம் சிவசுதர்சன்  
4.         உபதலைவர்:-                 திரு. உருத்திரமூர்த்தி மகிந்தன்
5.         உப செயலாளர்:-           திரு கேதீஸ்வரன் கஜன்


நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: (6)

6.         திரு. பொன்ராசா கேதீஸ்வரன்

7.         திரு. தம்பிராசா சுபகாரன்

8.         திரு கேதீஸ்வரன் கஜாலன்

9.         திருமதி கனகரத்தினம் தபோஆனந்தி

10.       திருமதி பரமானந்தம் நகுலாம்பிகை

11.       செல்வி வாரித்தம்பி கமலேஸ்வரி

நோக்கங்கள்

ஒட்டங்கேணி சனசமூக நிலையதின் நோக்கங்கள் :-
  •  சிறார்களுக்கு இலவச அறநெறிக் கல்வி கற்பித்தல்.
  • முதியோர் பகுதி நேர ஓய்வு மையம் உருவாக்கல்.
  • ஒட்டங்கேணி விளையாட்டு கழக நடவடிக்கைளுக்கு ஊக்கமளித்தல்.
  • உள்ளூர் மக்களுக்கான சமூக, வர்த்தக, வாழ்வியல் அறிவுரைகள் வழங்கல்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார நிலைத்திட்டங்கள், மரம் நாட்டுத்திட்டம் போன்ற சமூக நல மேம்பாடை மேலும் வளப்படுத்துதல்.
  • ஆன்மிக மெய்ஞான சிந்தனையை போதித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ளல்.

குறிப்பு:- ஒட்டங்கேணி சனசமூக நிலையத்தை மேலும் மேம்படுத்த புலம்பெயர் வாழ் ஒட்டங்கேணி ஆலய அடியார்கள் பிரித்தானியாவில் (The United Kingdom) ஒட்டங்கேணி சனசமூக நிலையயத்துக்கான அறங்காவலர் அமைப்பை ஆரம்பித்துள்ளார்கள். இந்த அமைப்பானது எமது எதிர்கால திட்டங்களுக்கு நிதிஉதவி, மற்றும் ஆலோசனைகள் வழங்கி எம் கிராமத்தை மேலும் மேம்படச் செய்வார்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.

அறநெறி 

அறநெறி பாடசாலை

அறநெறி பாடசாலை உத்தியோ பூர்வமாக நவராத்திரி நாளான விஜய தசமி அன்று (08/10/2019) ஆலய மகா மண்டபதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆலய மண்டபத்தினுள் பெண் ஆசிரியர்கள் தொடர்ந்து சென்று சேவை செய்யமுடியாத காரணத்தினால், ஆலயம் அருகே புறம்பான மண்டபத்தை அமைக்கவேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் கொரோன வைரஸ் காரணமாக இச் சேவைகள் தடைப்பட்டு இருந்தது

Oddenkerny Children's School

அறநெறி பாடசாலை / School of Ethics

ஒட்டங்கேணி அறநெறி பாடசாலை 26/07/2019 இல் ஆலய பரிபாலன சபையினால் ஆரம்பிக்கப்பட்டு.  ஒட்டங்கேணி சனசமூக நிலையம் (ஒ.ச நி) யினால் நடாத்தப்பட்டு வருகிறது.  

Oddenkerny Children's School (OCS) was formed on the 26th of July 2019. This school is running under the Oddenkerny Community Center (OCC).

அறநெறி பாடசாலை உத்தியோ பூர்வமாக நவராத்திரி நாளான விஜய தசமி அன்று (08/10/2019) ஆலய மகா மண்டபதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆலய மண்டபத்தினுள் பெண் ஆசிரியர்கள் தொடர்ந்து சென்று சேவை செய்யமுடியாத காரணத்தினால், ஆலயம் அருகே புறம்பான மண்டபத்தை அமைக்கவேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் கொரோன வைரஸ் காரணமாக இச் சேவைகள் தடைப்பட்டு இருந்தது.

ஒட்டங்கேணி சனசமூக நிலையம்

ஓட்டங்கேணி ஆலய பரிபாலன சபையின் விசேட கூட்டம் 26/07/2019, 31/07/2019, மற்றும் 08/08/2019 இல் ஆலய தலைமை போஷகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முக்கிய விடயங்களில் ஒட்டங்கேணி சனசமூக நிலையம் ஆரம்பிப்பது பற்றியும், அறநெறி பாடசாலையும், விளையாட்டு கழகமும் இதனுள் உள்ளடக்கப்படும் எனவும் ஆலய பரிபாலன சபையியாராலும், ஆலய பக்தர் களினாலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப் பட்டது.

இதற்கு அமைய ஜூலை மாதம் 2019 ஆண்டு நடைபெற்ற வருடாந்த உற் சவத்தில் சமய அறநெறி சார்ந்த நிகழ்வு களும், விளையாட்டு போட்டிகளும் ஆலய வழாகத்தினுள் ஒட்டங்கேணி சனசமூக நிலையம் ஊடக நடாத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

விபரங்கள் பின்வருமாறு:- 

26/07/2019 இல் நடைபெற்ற போட்டியில் பங்குபற்ற பெயர் தந்தோர் எண்ணிக்கை 50. இதில் 36 சிறார்கள் போட்டியில் பங்குபற்றி னர். போட்டிகள் (அறநெறி பாடசாலை) :- 

தரம் 10 - 13 மாணவர்களுக்கான “கோலம் போடும்” நிகழ்வில்  கலந்துகொண்டு பரிசு பெற்ற மாணவர்கள் 7 பேர்.     

1.         செல்வி             ப. கருஷிகா         1ம் இடம்

2.         செல்வி             சி. அபிநயா         2ம் இடம்

3.         செல்வன்        ர. திலக்க்ஷன்     3ம் இடம்

4.         செல்வன்        சி. பானுசன்         3ம் இடம்

5.         செல்வன்        மோ. சஜன்           தேர்ச்சி

6.         செல்வன்        அ. தனுஷ்             தேர்ச்சி

7.         செல்வன்       சு. லதுஷா             தேர்ச்சி


அத்துடன் பூமாலை கட்டும் போட்டியும் நடைபெற்றது.

அறநெறி பாடசாலை

தரம் 10-13 மாணவர்களுக்கான பஞ்ச புராணம் ஓதுதலில், (திறந்த போட்டி) கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்கள் 7 பேர்.

1.         செல்வி       ப. கருஷிகா         1ம் இடம்
2.         செல்வன்   இ. நிதுசன்           2ம் இடம்
3.         செல்வன்   திஷானன்             3ம் இடம்
4.         செல்வி    சி. சகானா           தேர்ச்சி
5.         செல்வன்   இ. தட்சிகன்         தேர்ச்சி
6.         செல்வன்   வி. கஜனன்           தேர்ச்சி
7.         செல்வன்   வி. பூவண்ணன்   தேர்ச்சி

சிறார்களுக்கான தேவாரப்போட்டி நடை பெற்று, கலந்துகொண்டஅனைத்து மாண வர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டது.

1.  செல்வி       ம. அஞ்சிக்கா  
2.    செல்வன்   பா. அபிசாந்
3.    செல்வி       வி. காருண்ஜா
4.    செல்வன்   ம. கனிசியன்
5.    செல்வன்   ர. திருஷன்
6.     செல்வன்   தே. தருமிலன்
7.     செல்வன்   க.மகீஷன் 

இப் போட்டிகனின் நடத்துனர்களாக செல்வி இ. இராசமலர், திருமதி. தபோ ஆனந்தி, திரு. சு. நடராஜா, செல்வி. ர. கேதுஷா, திருமதி ர. சுபாஷினி, திருமதி. சி. துசியந்தி, திருமதி வி. காமாட்சி, திருமதி. கி. திலகவதி, திருமதி சீ. பிரேமாவதி அகியேர்கலந்துகொண்டனர்.

ஆலய தலைமை போஷகர் திரு. சு. கிருஷ்ணதாசன் இவ் நிகழ்வுகளை ஆரம் பித்து நடத்திவைத்தார். பஞ்சபுராண போட்டிக்கான முதல் பரிசு ரூபா.10,000/- திருமதி சீராளன் பிரேமவாதியினால் வழங்கப்பட்டதுடன் மொத்தம் ரூபா. 30,000/- பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற வர்களுக்கான பரிசில்களுக்கு அனுசரணை வழங்கியவர்கள்:- இலண்டன், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த திரு. சு. கிருஷ்ணதாசன், திரு. சு. மோகனதாசன், திருமதி சர்வேஷ் சுகுணாவதி, திருமதி சீராளன் பிரேமவாதி.

ஒட்டங்கேணி விளையாட்டுக் கழகம்

ஒட்டங்கேணி சனசமூக நிலையதினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்      

31/07/2019 இல் ஆலய காவல்த் தெய்வமாகிய நாச்சிமார் முன்றலில் முதல் முறையாக விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு, கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது.

1. வாலிபர்களிக்கும் திருமணம் ஆன ஆண்களுக்குமான கயிறு இழுத்தல் போட்டி யில், திருமணம் ஆன ஆண்கள் அணி வெற்றி பெற்றது.

2. பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி யில், நாச்சிமார் இல்லம், பிள்ளையார் இல்லம் என்ற அணிகளில், நாச்சிமார் இல்லம் வெற்றி பெற்றது.

3. இசை நாற்காலிப் போட்டி நடைபெற்றது, இதில் ஆண்களுக்கான போட்டியில் திரு சி. துலக்க்ஷன் இறுதி நாற்காலியை கைப்பற்றி வெற்றிபெற்றார்.

பெண்களுக்கான போட்டியில் திருமதி சிசுபாலன் ரேவதி வெற்றி பெற்றார். இதற்கன பரிசாக தலா ரூபா.1000 ஐ திருமதி மகேஸ்வரி சிதம்பரப்பிள்ளையும், திரு சேனாதி ராஜாவும் வழங்கினார்கள்.

வெற்றிபெற்ற வர்களுக்கான பரிசில்களுக்கு அனுசரணை வழங்கியவர்கள்:- 

இலண்டனிலிருந்து வருகை தந்த திரு. சு. கிருஷ்ணதாசன், திரு. சு. மோகனதாசன். 

கயிறு இழுத்த குழுக்களுக்கான பரிசில்கள் ஆலய முன்றலில் திருவிழா முடியுவுற்ற வைரவர்மடை நாளில் வழங்கப்பட்டது.  


தொடர்ந்து ஒட்டங்கேணி சனசமூக நிலையம் தனது விளையாட்டு நிகழ்வுகளை மயிலபுரத்தில் நடாத்தி வருகிறது.

Contact Us
ஒட்டங்கேணி சனசமூக நிலையம் (ஒ.ச.நி)
ஒட்டங்கேணி வீதி, கச்சாய் வடக்கு,
கொடிகாமம், இலங்கை. 

ODDENKERNY COMMUNITY CENTRE (OCC)
OK Street, Kachchai North, Kodikamam, Sri Lanka

www.oddenkerny.com/occ
Email: occ@oddenkerny.com
https://www.facebook.com/OCC108

Telephone
President : +94 (0) 77 755 5504
Secretary: +94 (0) 76 640 7925

ஒட்டங்கேணி சனசமூக நிலைய நிர்வாகக் குழு, ஒட்டங்கேணி சனசமுக நிலையம், ஒட்டங்கேணி வீதி, கச்சாய் வடக்கு, கொடிகாமம், இலங்கை.
ODDENKERNY COMMUNITY CENTRE COMMITTEE, ODDENKERNY  COMMUNITY CENTRE (OCC), OK STREET, KACHCHAI NORTH, KODIKAMAM, SRI LANKA
 (Located at Oddenkerny Pillayar Temple) / ESTABLISHED 26 JULY 2019
Board of Trustees